Oxford Languages and Google

கூகுளின் ஆங்கிலம்-தமிழ் அகராதி இருமொழிகளில் அளிக்கப்படுகிறது. இது ஆக்ஸ்போர்டு மொழிகளால் வழங்கப்படுகிறது.

 

ஆக்ஸ்போர்டு மொழிகள் 150 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் அதிகாரபூர்வமான அகராதிகளை தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் உலகின் முன்னனி அகராதி பதிப்பகத்தார்.

இந்த ஆங்கிலம்-தமிழ் இருமொழி அகராதியில் இணைக்கப்படுவன யாவை?


 

இந்த ஆங்கிலம்-தமிழ் அகராதி அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் 50,000க்கும் மேற்பட்ட சொற்கள் மற்றும் சொற்கூறுகளை விரிவாக வழங்குகிறது.

எங்களது அகராதிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?


 

சான்றை அடித்தளமாகக் கொண்ட முறையில் அகராதி தயாரித்தால் மட்டுமே அம்மொழியின் கூறுகளை மிகத் துல்லியமாகக் காண்பிக்க இயலும் என்று ஆக்ஸ்போர்டு மொழிகள் உறுதியாக நம்புகிறது.
 
எங்கள் அகராதிகள், ஒரு சொல்லின் உண்மையான பயன்பாட்டின் மீது மேற்கொண்ட ஆய்வைக் கொண்டு அச்சொல்லின் வரையறை, எழுத்துக் கூட்டுரு, இலக்கண செயல்பாடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கிறது; வழிகாட்டல் அனைத்தும் இந்த ஆய்வுகளைக் கொண்டே வழங்கப்படுகின்றன.
 
இம்முறையை பயன்படுத்தி வழக்கில் சேரும் சொற்கள் மற்றும் பயன்பாடுகளை எங்கள் குழு இனம் காண்கின்றது.
 
சான்றை அடித்தளமாகக் கொண்ட இம்முறை விவரிக்கும் சொல்லியல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறுவதைக் காட்டிலும், ஒரு மொழியின் நிலை, உலகெங்கிலும் அதன் பயன்பாடு ஆகியவற்றை விவரிக்கவே எங்கள் அகராதிகள் முனைகின்றன.
 
ஒவ்வொரு மொழியையும் துல்லியமாகவும், அர்த்தமுள்ள வகையிலும் காண்பிக்கும் எங்களது ஆற்றலில் பயனர்கள் முழு நம்பிக்கை கொள்ளும் வகையில், நாங்கள் தயாரிக்கும் அல்லது எங்களது வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் அகராதிகள் அனைத்தும் முழுமையான தர பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

குறுமொழி (ஸ்லாங்) மற்றும் வட்டார மொழி வழக்குகள் எங்களது அகராதியில் இடம்பெறுவது ஏன்?


 

ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் துல்லியமாகவும் விரிவாகவும் ஆவணப்படுத்தவே நாங்கள் விழைகிறோம். எனவே, குறுமொழி மற்றும் வட்டார மொழி வழக்கு உட்பட அன்றாட வாழ்க்கையில் மொழியின் பயன்பாட்டை அதன் எல்லா வடிவங்களையும் கணக்கில் கொண்டு பதிவு செய்துள்ளோம்.
 
ஒரு சொல்லின் மொழி நிலை மற்றும் பயன்பாட்டில் பயனர்கள் தெளிவு கொள்வதற்காக, அனைத்து குறுமொழிகளும், வட்டார வழக்கு சொற்களும் எங்கள் அகராதி பதிவுகளில் துல்லியமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

எங்களது அகராதிகளில் எடுத்துக்காட்டு வாக்கியங்கள் இணைக்கப்படுவது ஏன்?


 

ஒரு சூழலில் பொதுவாக ஒரு சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய எடுத்துக்காட்டு வாக்கியங்கள் உதவுகின்றன. இவை அச்சொல்லின் வரையரைக்குப் பதிலாகப் பயன்படுவதில்லை. கூடுதல் விவரங்களை மட்டுமே அளிக்கின்றன.
 
வரையரை அளிக்கும் விவரங்களில் இருந்து விலகாமல், இலக்கண மற்றும் சொற்பொருள் சார்ந்த சூழலில் ஒரு சொல்லை விவரிக்கும் வகையில் எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 
எடுத்துக்காட்டு வக்கியங்களில் தவறான தகவல்கள், பாரபட்சங்கள் மற்றும் அவமதிப்பான வாக்கியங்கள் ஆகியவற்றை தவிர்க்க நாங்கள் பெரிதும் முயல்கின்றோம். குறிப்பிட்ட வாக்கியங்களில் எவையேனும் எங்கள் உயர்ந்த தரநிலைகளை சந்திக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து தொடர்பு கொண்டு உங்களது கருத்தை தெரிவிக்கவும்.

ஆக்ஸ்போர்டு மொழிகள் பயனர் கருத்துப்பதிவிற்கு எவ்வாறு